fbpx

“15-வது மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள்..” கள்ளக்காதல் ஜோடிக்கு மரண தண்டனை..!!

சீனாவில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மற்றும் அவரது காதலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021 ஆம் வருடம் சீனா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் வசித்து வந்தவர் ஜாங் போ. இவருக்கு திருமணமாகி சென் மெய்லின் என்ற மனைவியும் ஜாங் ரூயிக்ஸ்யூ என்ற 2 வயது பெண் குழந்தையும் ஜாங் யாங்ரூய் என்ற 1 வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் ஜாங் போ, யே செங்சென் என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்திருக்கிறார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் தங்களது திருமணத்திற்கு தடையாக இருக்கும் அதனால் குழந்தைகளை கொன்று விடலாம் என யே தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தையான ஜாங் போ தனது அடுக்குமாடி குடியிருப்பின் 15 வது தளத்திலிருந்து 2 குழந்தைகளையும் வீசி கொடூரமாக கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவருக்கும் நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின்படி மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Next Post

அடக்கொடுமையே.! 17 வயது மகளை கர்ப்பமாக்கிய சித்தப்பா..!! போக்சோவில் கைது செய்த போலீஸ்.!

Sat Feb 3 , 2024
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய வழக்கில் சித்தப்பா கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் திருத்தணி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் கருப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து […]

You May Like