fbpx

சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ குறுவாள் வைத்துக் கொள்ள அனுமதி அளித்த நீதிமன்றம்

சீக்கியர்கள் தங்கள் மதநம்பிக்கையின் ஓர் அங்கமாக, எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய ஒன்றான கிர்பான் என்னும் குறுவாளுக்கு எதிரான தடை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி, கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி கிர்பான் குறுவாளை எந்நேரமும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். சீக்கியர்களின் இந்த வழக்கத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் அனுமதி அளித்துள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் மாகாணத்தில் கிர்பான் குறுவாளுக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனப் பாகுபாடு சட்டத்தின் கீழ் இந்த தடை அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தனர். ஏற்கெனவே நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்த நிலையில், மேல்முறையீட்டுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து குயின்ஸ்லேண்ட் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Maha

Next Post

தி கேரளா ஸ்டோரி பட நாயகிக்கு உணவு ஒவ்வாமையால் உடல்நலக் குறைவு

Sat Aug 5 , 2023
தி கேரளா ஸ்டோரி பட நாயகி அடா ஷர்மா நடித்த கமாண்டோ 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளும், நிகழ்ச்சிகளும் தொடங்க இருந்தன. இந்த சமயத்தில்தான் அடா ஷர்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடும் வயிற்றுபோக்கு மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று காலையில் இருந்தே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அடா ஷர்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

You May Like