fbpx

‘Credit Card’ தொந்தரவால் பறிபோன உயிர்.! காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு.!

Credit Card: தெலுங்கானா மாநிலத்தில் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் கீசாரா பகுதியைச் சேர்ந்தவர் ரகுலா சுரேஷ்குமார். 45 வயதான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாக்யா(41) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 8 லட்ச ரூபாய் வரை கடனாக வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. இந்த கிரெடிட் மூலமாக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் தம்பதிகள் அவதிப்பட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது

இந்நிலையில் கடனை வசூலிக்க வந்த கிரெடிட் கார்டு நிறுவனத்தினர் கணவன் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த பாக்யா விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார். அவரது கணவர் ரகுல்லா சுரேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால் அக்கம் பக்கத்தினர் முன்பு கிரெடிட் கார்டு நிறுவன ஊழியர்கள் தகராறு செய்ததால் மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

Next Post

"'Rental House Agreement'… அதில் இருக்கும் சாதகங்கள் பாதகங்கள் என்ன.? வழக்கறிஞர் விளக்கம்.!

Sun Feb 18 , 2024
Rental House Agreement: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர் . இத்தகைய வாடகை வீடுகளில் வசிக்கும் போது அவர்களுக்கு வீட்டின் ஓனரிடம் இருந்து பல்வேறு விதமான இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வீட்டின் பராமரிப்பை யார் மேற்கொள்வது மற்றும் வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது தொடர்பான விஷயங்களில் வீட்டின் முதலாளி மற்றும் குடியிருப்போர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்திய […]

You May Like