fbpx

“அடேய் கேமரா மேன்” அஸ்வினை பங்கம் செய்த வீடீயோ.! திட்டிய அஸ்வின்.!”

இந்திய டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா தான் பேசும்போது வீடியோவில் பின்பக்கத்தில் அஷ்வினும் தெரியும்படி சேர்த்து வீடியோவை எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் அஷ்வின் தனது ஸ்வெட்டர் தேடிய நிலையில் , அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த், “இதை பல முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை இதை பார்க்கும் போதும் சிரிப்பு தான் வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அஷ்வின் அவர்களே உங்கள் ஸ்வெட்டரை எப்படி கண்டுபிடிப்பது என எங்களுக்கும் சொல்லிகொடுங்கள்” என்று நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ட்விட்டரிலேயே அவருக்கு பதிலளித்த அஷ்வின், “முதலில் ஸ்வெட்டரின் அளவை பார்த்தேன், ஸ்வெட்டரை துவைத்தார்களா என்று பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக அந்த ஸ்வெட்டரில் எந்த வகையான நறுமணம் வீசுகிறது என்று பார்த்தேன், கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், “அடேய் கேமராமேன” என அதை வீடியோ எடுத்த கேமராமேனையும் திட்டி நகைச்சுவையாக பதிவிட்டார் அஷ்வின்.

Baskar

Next Post

இனி பள்ளிக்கு மட்டம் போட முடியாது.. மாணவர்களுக்கு இப்படி தான் தண்டனை.!

Wed Nov 9 , 2022
திருத்தணி பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து சுமார் 1000மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்ற நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ரயில், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா என பொது இடங்களில் ஜாலியாக சுற்றி திரிந்து வருகின்றனர். […]

You May Like