fbpx

கர்ப்பிணி மனைவிக்கு ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்த கொடூர கணவன்..!! திடுக்கிடும் திகில் சம்பவம்..!!

இரண்டாவது திருமணம் செய்வதற்காக, மனைவியை கொடுமைப்படுத்தி, ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்து கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டாவை சேர்ந்தவர் தருண் (34). இவரது மனைவி கல்யாணி (30). திருமணம் நடந்த ஒரு ஆண்டில் இருந்து கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு மாமியார் குடும்பத்தினரும், தனக்கு ஏற்ற ஜோடி நீ இல்லை என தருணும் கல்யாணியை கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தருண் கூறி வந்துள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். அதன்பிறகும் தருண் மனைவியை கொடுமைபடுத்துவதை நிறுத்தவில்லை. ”இரண்டாவது திருமணம் செய்யப்போகிறேன் நீ செத்து தொலை” என்று அடிக்கடி சண்டையிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

கர்ப்பிணி மனைவிக்கு ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்த கொடூர கணவன்..!! திடுக்கிடும் திகில் சம்பவம்..!!

இந்நிலையில், அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்யாணியை சரமாரி தாக்கிய தருண், கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்து அவரை நிர்ப்பந்தப்படுத்தி குடிக்க வைத்துள்ளார். முதலில் மறுத்த கல்யாணி, பின்னர் கொடுமை தாங்க முடியாமல் அந்த ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வலியால் அவர் அலறித் துடிக்க தொடங்கியதும் அங்கிருந்து தருண் தப்பியோடினார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கல்யாணி உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்யாணியின் பெற்றோர் அளித்த புகாரை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர்.

Chella

Next Post

பொது இடத்தில் விவாதிக்க தயாரா..? முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்..!!

Wed Nov 30 , 2022
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றதாகவும், தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை எனவும் முதல்வர் முக.ஸ்டாலின் அரசு விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆனால், கடந்த […]
பொது இடத்தில் விவாதிக்க தயாரா..? முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்..!!

You May Like