fbpx

சிறையில் கொடுமை!… பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு!

Imran Khan: தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் அளிக்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவம் கலந்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மனைவி புஷ்ரா பீவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Readmore: அதிகரிக்கும் அம்மை நோய்!… பெண்களின் சினைப்பையை பாதிக்கும் ஆபத்து!… அறிகுறிகள் இதோ!

Kokila

Next Post

MDH Masala: இல்லத்தரசிகளே இந்த மசாலாவை படுத்தினால் உயிருக்கே ஆபத்து...!

Sun Apr 21 , 2024
MDH மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் நான்கு மசாலாக்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாக்களை ஆய்வு செய்த ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. MDH-ன் மெட்ராஸ் கறி மசாலா, சாம்பார் மசாலா, கறி மசாலா, எவரெஸ்ட்டின் மீன் கறி மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மசாலா பொருள்களை மக்கள் […]

You May Like