ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கயிருந்தது. ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த இறுத்திப்போட்டிக்கு காத்திருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாம்பியன் ஆகும் அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You May Like
-
2023-06-03, 12:44 pm
சென்னை – ஒரிசா சிறப்பு ரயில்கள்….! முழு விவரம் இதோ…..!
-
2024-06-04, 5:20 am
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது!!