சென்னையில் இயங்கி வரும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஜூனியர் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட், ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் , ப்ராஜெக்ட் அசோசியேட் 1, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ ஆகிய பிரிவுகளில் இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
ஜூனியர் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ். சி கெமிஸ்ட்ரி/ லைஃப் சயின்ஸ் / பயோ டெக்னாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ/ பி.டெக்/ டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.டெக் / எம் ஃபார்மில் பயோ டெக்னாலஜி அல்லது பயோ பார்மசிடிகள், பார்மசிடிகள் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜெனிடிக் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 28 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 50 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் 28.03.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பல தகவல்களை அறிய .clri.org என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.