மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் ஆனது அதிகாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.