fbpx

சென்னை – மசூலிப்பட்டினம் இடையே “மிக்ஜாம்” புயல் கரையை கடக்கும்…! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

“மிக்ஜாம்” புயல் சென்னைக்கு வடக்கே ஆந்திரா பகுதியில் கரை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுப்பெறும். அதனைத்தொடர்ந்து புயல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் சென்னையிலிருந்து 800 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 700 கி.மீ கிழக்கே தற்போது மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.

மேலும் டிசம்பர் 4ஆம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, ஆனால் இது புயலாக கரையை கடக்குமா, தீவிர புயலாக அல்லது மிக தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்குமா என்பது குறித்த கேள்விக்கு, புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

சிகரெட் முதல் மன அழுத்தம் வரை!…. மாரடைப்பை ஏற்படுத்தும் மோசமான பழக்கங்கள்!… நிபுணர்கள் எச்சரிக்கை!

Fri Dec 1 , 2023
மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதால், பலரும் தங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டுமெனில், உங்களிடம் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவது தான் முதல் படி. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க, உங்கள் இதயத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அன்றாட பழக்கங்கள் கைவிட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் […]

You May Like