fbpx

Cyclone | நாளை உருவாகிறது புயல்..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (மே 24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, ”வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (மே 25) புயலாக உருவாகும். இதற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ எனப் பெயர் சூட்டியுள்ளது. இது வங்கதேசத்துக்கு அருகே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும்”என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம்..? கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்றே தணிந்தது. திருச்சியில் 93 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை பதிவானது. இந்நிலையில், இப்போது வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது தமிழகத்திற்கான மழை வாய்ப்பு படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழைப் பொழிவு குறையத் தொடங்கிய நிலையில், இந்தப் புயல் வலுப்பெற பெற மழை முற்றிலுமாக நீங்கும்.

இந்தப் புயல் வலுப்பெற்ற பின்னர் ஒரு சில வட மாவட்டங்களில் மீண்டும் கடுமையான வெப்பம் ஏற்படும். அதேவேளையில், கேரளாவில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கொச்சி போன்ற நகரங்களில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : பண்ணை வீட்டில் பர்த்டே பார்ட்டி..!! போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி..!! வசமாக சிக்கிய நடிகைகள்..!!

English Summary

The India Meteorological Department said that the low pressure area over the Bay of Bengal has strengthened into a deep depression today (May 24).

Chella

Next Post

Stocks: இந்திய பங்குச்சந்தையில் புதிய உச்சம்! நிஃப்டி, சென்செக்ஸ் தடாலடி உயர்வு! குஷி மோடில் முதலீட்டாளர்கள்!

Fri May 24 , 2024
நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்ந்தன. ஆரம்ப வர்த்தகத்தில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 104.38 புள்ளிகள் அதிகரித்து 75,525.48 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், நிஃப்டி குறியீடு 15.45 புள்ளிகள் அதிகரித்து 22,983.10 ஆக இருந்தது. பரந்த சந்தையில், நிஃப்டி நெக்ஸ்ட் 50, நிஃப்டி 100, நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் உள்ளிட்ட அனைத்து முக்கிய குறியீடுகளும் வெள்ளிக்கிழமை லாபத்துடன் […]

You May Like