fbpx

திடீரென்று குறைந்த சிலிண்டரின் விலை…..! சிலிண்டரின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா……?

இந்தியாவைப் பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட்வற்றின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பெட்ரோல், டீசலை பொருத்தவரையில், சற்றேற் குறைய 6 அல்லது 7 மாதங்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குறைக்காமல், அதே சமயம், அதன் விலையை அதிகரிக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்கிறது.

அதற்குக் காரணம் இன்னும் ஒரு சில மாதங்களில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த வகையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் சற்று குறைந்து காணப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், இந்த விலை நிலவரம் தொடர்பாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நாடு முழுவதும் மக்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருப்பது சமையல் எரிவாயு சிலிண்டர். இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உள்ளிட்டவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கிறது. சென்ற ஒரு வருட காலமாக பெட்ரோல், டீசல் விலை மட்டும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாள் மாற்றம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

அந்த விதத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை சென்ற மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து, எந்த வித மாற்றமும் சந்திக்காமல், இந்த மாதமும் அதே விலையில், விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 14.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை, ரூபாய் 1118க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை, இந்த மாதம் 92.50 காசுகள் குறைந்து 1852.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு, மானியம் கொடுக்கப்பட்டாலும், அதன் விலை குறையாமல் உள்ளதால், பொதுமக்கள் விலை குறைய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Next Post

கூகுள் உங்களுடைய சுய விவரங்களை சேமித்து வைக்கிறதா….? கவலை வேண்டாம் வந்துவிட்டது புதிய வழி…..!

Sat Aug 5 , 2023
கூகுள் என்றாலே எப்போதும் பாதுகாப்பான ஒன்று என பொதுமக்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் இந்த கூகுள் செயலியிலும், பல்வேறு குளறுபடிகள், நம்முடைய பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதனை பார்த்து கவனமுடன் பொதுமக்கள் கையாள வேண்டும். பொதுவாகவே, இந்த கூகுள் தளத்தில், நாம் தேடும் அனைத்து தகவல்களும் நமக்கு தெரியாமல் திருடப்பட்டு, பல்வேறு சமூக வலைதள பக்கத்தில், அதற்கு தகுந்தவாறு, நமக்கு தகவல்களை வழங்கி வருகிறது. இப்படி […]

You May Like