சமீபத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.603 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்கின்றன.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதிய ‘சிலிண்டர் ரீஃபில்லிங் திட்டத்தை’ அறிவித்துள்ளார், இதன் கீழ் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் முக்யமந்திரி லாட்லி பிராமின் யோஜனாவின் அனைத்து பயனாளிகளும் செப்டம்பர் 1 முதல் 450 ரூபாய்க்கு வீட்டு எல்பிஜி சிலிண்டர் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்கள் அதிக அளவில் பயன்பெறுபவர்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொடர்புத் துறையின் அறிக்கை படி, முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் ஒவ்வொரு நபரும் எரிவாயு இணைப்பு அட்டை மற்றும் சமக்ரா அட்டை போன்ற தகவல்களை பூர்த்தி செய்து அரசாங்க போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
மானியம் பெறுவது எப்படி…?
பயனாளிகள் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்க வேண்டும், அதே நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கும். இருப்பினும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா விஷயத்தில், அரசாங்கம் மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றும், பின்னர் அவர்கள் அந்தத் தொகையை பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றம் செய்வார்கள்.