fbpx

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. அகவிலைப்படி உயர்வு குறித்து இன்று வெளியாக உள்ள குட்நியூஸ்..

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..

இதனிடையே ஹோலி பண்டிகையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என்று தகவல் வெளியானது.. ஆனால் ஹோலி பண்டிகை முடிந்துவிட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை… இந்த சூழலில், அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்து முடிவெடுக்க இன்று (15.03.2023) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மத்திய அரசு, இன்றே அந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு 3 சதவீதமாக இருக்கும் என்றும், இதனால் அவர்களின் அகவிலைப்படி 38 முதல் 41 சதவீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது..

7வது ஊதியக் குழுவின் கீழ் வரும் இன்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 31, 2023 முதல் உயர்த்தப்பட்ட சம்பளத்தைப் பெறலாம். இது தவிர, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

2023 நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு...! ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்...!

Wed Mar 15 , 2023
நீட் முதுகலை தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை கடந்த 5-ம் தேதி நடத்தி முடித்தது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து தேர்வை எழுதினர். தற்பொழுது தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, டெல்லியில் உள்ள VMMC & SAFDARJUNG மருத்துவமனையைச் சேர்ந்த ஆருஷி நர்வானி என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததுள்ளார். […]

You May Like