fbpx

மாமனாருடன் மருமகள் உல்லாசம்!. கையும் களவுமாக பிடித்த மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்!. கழிவறையில் சடலமாக மீட்பு!

Murder: உத்தர பிரதேசத்தில் மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்ததை கண்ட மாமியாரை கொலை செய்து கழிவறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி(50). இவரது மகன் தீபக். இந்தநிலையில் இவரது கணவர் குர்கு யாதவ்க்கும் மருமகளும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. அதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீதா தேவி வெளியே சென்றிருந்த நிலையில், மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு சென்று இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்த கீதா தேவி, கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனை மகன் தீபக் மற்றும் அக்கம் பக்கதினரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாமனாரும், மருமகளும் சேர்ந்து கீதா தேவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, நேற்றுமாலை கீதா தேவியை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மருமகள் தனது மாமியாரின் தலையில் செங்கல் மற்றும் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்து காணவில்லை என்று நாடகமாடியுள்ளனர்.

இதையடுத்து, கணவர் தீபக்கிடம் தனது மாமியார் அடையாளம் தெரியாத நபருடன் பைக்கில் எங்கோ சென்றதாக பொய் கூறியுள்ளார். தொடர்ந்து கணவர் குர்கு யாதவ் வெள்ளிக்கிழமை கீதா தேவியை காணவில்லை என்று புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய போலீஸார், சனிக்கிழமை காலை கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

மாமனார், மருமகள், மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தீவிர விசாரணையில், மாமனார் மற்றும் மருமகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் காதலித்து வருவதாகவும், கீதா தேவி தங்களது உறவுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Readmore: எச்சரிக்கை!. ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் போறீங்க?. தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

English Summary

Daughter-in-law fun with father-in-law! The brutality that happened to the mother-in-law who was caught with her hands!. Recovery of a corpse in the toilet!

Kokila

Next Post

”வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது”..!! சும்மா இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்..!! ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கிட்ட சம்பாதிக்குறாரு..!!

Fri Jan 10 , 2025
Last year alone, Morimoto earned about $80,000 (about Rs. 69 lakh in Indian currency).

You May Like