fbpx

JIPMAT தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 17-ம் தேதி வரை கால அவகாசம்…!

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் exams.nta.ac.in/JIPMAT என்ற வலைதளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 18-ம் தேதி வரை செலுத்தலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பாடத்திட்டம், கட்டணம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Deadline to apply for JIPMAT exam is March 17th

Vignesh

Next Post

இந்த ஜூஸ் மட்டும் குடிங்க, மொத்த குடலையும் கழுவி விட்டது மாதிரி இருக்கும்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்..

Wed Mar 12 , 2025
juice to clean intestines

You May Like