fbpx

பாலியல் குற்றவாளிகள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை..!! டொனால்டு டிரம்ப் அதிரடி..!!

அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த ஜோ பைடனை, டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இவர், ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் முடிவை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த டிரம்ப், “மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை ஜோ பைடன் குறைத்துள்ளார். அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகள் மற்றும் அரக்கர்களுக்கு மரண தண்டனை வழங்க நீதித்துறைக்கு உத்தரவிடுவேன். சட்டம் மற்றும் ஒழுங்குள்ள நாடாக அமெரிக்காவை மீண்டும் மாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிறையில் சக கைதிகளைக் கொன்ற 9 பேர், வங்கிக் கொள்ளையின் போது கொலை செய்த 4 பேர், சிறைக் காவலரைக் கொன்ற ஒருவர் உள்ளிட்டோருக்கான தூக்கு தண்டனையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்..!! காதலன் கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Donald Trump has criticized Joe Biden for commuting the sentences of 37 death row inmates in the United States.

Chella

Next Post

”இபிஎஸ் இதை செய்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன்”..!! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!

Wed Dec 25 , 2024
Amma Makkal Munnetra Kazhagam General Secretary TTV Dinakaran's statement that he is ready to abstain from contesting the election for the good of the alliance has caused a stir.

You May Like