fbpx

பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல்..!

இந்திய திரை உலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் யோ யோ ஹனிஷிங் என்று அழைக்கப்படும் ஹனி சிங். இவர் இசை தயாரிப்பாளர், ரேப்பர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார்.இதன் பின்பு படிப்படியாக ரேப் பாடல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானார். இவரது பாடல்கள் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து சினிமாவில் பாடத் தொடங்கினார் யோ யோ ஹனி சிங். இவரின் பல்வேறு பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் யோ யோ ஹனி சிங் பாடியிருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது.இது போன்ற நிலையில், பாடகர் யோ யோ ஹனி சிங்கிற்க்கு கனடாவில் இருக்கும் கேங்ஸ்டர் தாதா கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இது சம்பந்தமாக பாடகர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாகவே தாதா கும்பல் மற்றுமொரு பிரபல பஞ்சாப் பாடகரை கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல்..!! ஜோடியை சுட்டுக்கொன்று முதலைக்கு இரையாக்கிய இளம்பெண்ணின் குடும்பம்..!!

Thu Jun 22 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டத்தில் உள்ள ரதன் பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவருக்கு ஷிவானி என்ற 18 வயது மகள் இருந்தார். ஷிவானியும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷியாம் என்ற 21 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் ஷிவானியின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு ஷிவானியின் தந்தை ராஜ்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்பாலின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் தொடர்ச்சியாக சந்தித்து […]
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல்..!! ஜோடியை சுட்டுக்கொன்று முதலைக்கு இரையாக்கிய இளம்பெண்ணின் குடும்பம்..!!

You May Like