Assam: நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அசாம் அரசு ஆசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் 1935ஐ ரத்து செய்ய முடிவு செய்ததாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த சர்மா தனது எக்ஸ் தளத்தில், “குழந்தை திருமணத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்புகளை வைப்பதன் மூலம் எங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு நீதியை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இன்று நடந்த அஸ்ஸாம் அமைச்சரவைக் கூட்டத்தில் இதை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். அஸ்ஸாம் முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் மற்றும் விதிகள் 1935, அஸ்ஸாம் ரத்துச் சட்ட மசோதா 2024-இல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வதில் சமத்துவத்தை கொண்டு வர, முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935 மற்றும் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு விதிகளை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த சட்டத்திற்கு, 2024க்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, அஸ்ஸாம் சட்டசபையின் அடுத்த மழைக்கால கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Readmore: அதிரடி…! ஃபாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்க கட்டணம்…! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு…!