fbpx

மதுபான ஊழல் வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி வரை மணீஷ் சிசோடியாவுக்கு சிறை…! நீதிமன்றம் உத்தரவு…!

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கடந்த 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது..

இதைத் தொடர்ந்து அவரை 20-ம் தேதி வரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மணீஷ் சிசோடியாவை, ஏப்ரல் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Vignesh

Next Post

”வீட்டுக்கு போனா திட்டுவாங்க”..!! பெற்றோருக்கு பயந்து வழக்கை மாற்றி கூறிய சிறுமி..!! நடந்தது என்ன..?

Tue Mar 21 , 2023
சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டதால், சிறுமியின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், அந்த வழக்கை வாபஸ் பெற்றனர். இந்தச் சம்பவம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். பள்ளி முடிந்ததும், தன்னுடன் 3 சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், தன்னை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று கைகளில் காயம் ஏற்படுத்தியதாக சிறுமி […]

You May Like