டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் அறையில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். தனது வீட்டில் இருந்து அவர் சென்றபோது பூங்காவிற்கு செல்கிறேன் என்று பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
மதிய நேரத்தில் வெளியில் சென்ற அந்த பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் மகளைக் காணவில்லை என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். மறுநாள் காலை வீட்டிற்கு முன் அந்த பெண் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஓடிச் சென்று இரவு முழுவதும் எங்கே போனாய் என்று கத்தி சண்டை இட்டுள்ளனர். அப்போது அழுது கொண்டே அந்த பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் சென்றதாகவும், அங்கு மேலும் 3 பேர் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று தன்னை மிரட்டி வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றனர் என பெண் அழுதவாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தனர்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர.