டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா என்பவறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர் .
நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக ரூ.86 கோடி பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அமலாக்கத்துறை இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதன் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா என்பவறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.