fbpx

மழை இன்றும் வெளுத்து வாங்கப்போகுது.. டெல்டாவிற்கு போட்ட ஸ்கெட்ச்..!! அப்போ சென்னை..? – டெல்டா வெதர்மேன் வார்னிங்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம் என நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்தது. அந்த வகையில் டிசம்பர் – ஜனவரி முதல் வாரத்தோடு மழை பெரும்பாலான மாவட்டங்களில் நின்று விட்டது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழையின் இறுதி கட்ட மழை நேற்று இரவு முதல் வெளுத்த வாங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் மழை நிலவரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் மழை நீடிக்கும். வட மாவட்டங்களான சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாக கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பதிவாகி வரும் சூழலில், அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக அநேக இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும். தென் மாவட்டங்களான புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பரவலாக கனமழை வாய்ப்பு. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து நாலுமுக்கு கக்காச்சி மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பதிவாககூடும் எனவும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கொங்கு மாவட்டங்களான கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் திண்டுக்கல் தேனி தென்காசி போன்ற மாவட்டங்களிலும் பரவலாக இன்று மழையை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்றைய தினம் மழை பெய்யும் என்றும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Read more ; பேச கூச்சப்படும் நபரா நீங்கள்..? கூச்ச சுபாவத்தை வென்று வாழ்க்கையில் வெற்றி பெறும் சில டிப்ஸ்..!  

English Summary

Delta Weatherman Hemachander has said that there is a possibility of widespread rain in Tamil Nadu today.

Next Post

அமெரிக்காவில் இன்று முதல் TikTok செயலி தடை.. ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கம்..!!

Sun Jan 19 , 2025
TikTok disappears from prominent app stores in US; Company says, 'fortunate that President Trump...'

You May Like