fbpx

நீட் தேர்வு ரத்து…! அமைச்சர் உதயநிதி தலைமையில் சென்னையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இன்று சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. சென்னையில் சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. தற்பொழுது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை தடை வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வாளர் ஜெகதீஸ்வரன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஜகதீஸ்வரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது 48 வயதான தந்தை செல்வசேகரும் குரோம்பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.

திமுக சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என்கின்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்த உள்ளது.

Vignesh

Next Post

மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை...! இன்றே கடைசி நாள் மக்களே...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sun Aug 20 , 2023
மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு […]
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like