fbpx

செம வாய்ப்பு..! காலாவதியான காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு முகாம்..!

காலாவதியான காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பித்துகொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்களுக்கு அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அம்பத்தூர் தலைமை தபால் நிலையம், (044-26245545), ஆவடி பாசறை தலைமை தபால் நிலையம் (044-26385093), தாம்பரம் தலைமை தபால் நிலையம் (044-22266204) ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் உங்களது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டுள்ளார். குறைந்த ஆவணங்களுடன் பாலிசிகளை புதுபிக்கும் வசதியுடன் அஞ்சல்துறை நிபுணர்களின் தனிப்பட்ட வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். பாலிசிகளை புதுப்பிக்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Department of Posts Special Camp for renewal of lapsed insurance policies

Vignesh

Next Post

சூப்பர்...! மாதம் தோறும் ரூ.6,000 வழங்கும் அரசின் சூப்பர் திட்டம்...! விண்ணப்பிக்க என்னென்ன தகுதி...?

Tue Sep 17 , 2024
Super scheme of the government which provides Rs.6,000 every month

You May Like