சட்டப்பேரவை துணை சபாநாயகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணமடைந்ததால் பா.ஜ.க.வினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ஆனந்த் மாமணி பொறுப்பில் உள்ளார். இவர் 3 முறை சவுதாட்டி என்ற தொகுதியில் பா.ஜ. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56, மனைவி , ஒரு மகன் மற்றும் ஒருமகள் உள்ளனர்.
சக்கரை நோய், கல்லீரல் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் கர்நாடக அரசியல் கட்சியினர் சோகத்தில் உள்ளனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இரங்கல் செய்தியை டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மாமணியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது ஊரில் இன்று வைக்கப்பட உள்ளது.நாளை இவரது உடல் இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.