fbpx

“ விரக்தியில் இருக்கும் ஓபிஎஸ், தனது சுயநலத்திற்காக கட்சியை அழிக்க பார்க்கிறார்..” கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. ஓபிஎஸ், தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு புறப்பட்டார்.. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க சென்றுள்ளார்..

இந்த நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம் நிலவுகிறது.. கற்களை வீசியும்,கம்புகளை வீசியும் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.. இதனால் அதிமுக தலைமை அலுவலகமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.. எனினும் பல்வேறு தடைகளை மீறி, தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் உள்ளே சென்றார்.. இபிஎஸ்0ன் புகைப்படங்களும், பேனர்களும் கிழிக்கப்பட்டன.. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது…

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற உள்ளது.. ஏற்கனவே 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இன்றைய தினம் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. ஓபிஎஸ், வைத்திலிங்கம் மேடையில் இருந்த போதே தேதி அறிவிக்கப்பட்டது.. ஆனால் பொதுக்குழு நடக்க கூடாது என்று ஓபிஎஸ் நீதிமன்றங்களில் முறையீடு செய்தார்.. ஆனால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.. நீதிமன்றம் இந்த கருத்தை சொன்ன பிறகும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இன்றைய பொதுக்குழுவிலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அமருவதற்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது..

ஆனால் இங்கே கலந்து கொள்ளாமல், ஒரு ரவுடிகும்பலை வைத்துக் கொண்டு, கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் முயற்சி செய்கின்றனர்.. இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.. விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக கட்சியை அழிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு கண்டனம் தெரிவிக்கப்படும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

#JustIn : அதிமுக பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு...

Mon Jul 11 , 2022
இன்று நடைபெற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. மேலும் “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக்குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை […]

You May Like