நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் மோசமான உணவு பழக்கங்களால் உடல் எடை வேகமாக பெருகி வருகிறது. இது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் தன்னம்பிக்கை இல்லாமல் செய்கிறது. உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை பின்பற்றினாலும் பேலியோ டயட் என்பது மேஜிக் போல் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதை குறித்து விவரங்களை பார்க்கலாம்?
பேலியோ டயட்டில் சாப்பிடக்கூடியவை –
பேலியோ டயட் முறையில் முட்டை, காய்கறிகள், பழங்கள், விதைகள் போன்றவற்றை சாப்பிடலாம். ஒமேகா 3 மற்றும் குறைந்த கொழுப்புள்ள மீன்கள், கறி வகைகளை சாப்பிடலாம். அவகோடா, தேங்காய், ஆளி விதைகளை உண்ணலாம். சமைக்கும்போது மற்ற எண்ணெய்களைவிட ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.
பேலியோ டயட்டில் சாப்பிட கூடாத உணவுகள்-
அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவு பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக சோறு, கிழங்கு வகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள கூடாது. சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது. பேலியோ டயட்டில் இருக்கும்போது பால் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. பால் குடிப்பதற்கு பதில் தேங்காய் பால் அல்லது பாதாம் பால் உபயோகப்படுத்தலாம்.
பேலியோ டயட் பலரது வாழ்விலும் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவி புரிகிறது. மேலும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவும், வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் செய்கிறது. இந்த டயட் முறையினை பின்பற்றுவது பலருக்கும் கடினமான ஒன்றாக இருந்து வந்தாலும் பேலியோ டயட்டின் மூலம் உடல் எடையை பலரும் கணிசமாக குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.