fbpx

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வந்து தரிசனம் செய்யும் இடமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், மலைப்பாதையில் 6 வயது சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்பவர்களை வனவிலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் பணியை மேற்கொண்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதற்கிடையே, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கியது தேவஸ்தான நிர்வாகம்.

இந்நிலையில் தற்போது கண்காணிப்புகேமராக்களில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதை அடுத்து, மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள், தனித் தனியாக வராமல் குழுவாக வருமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நரசிம்மர் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதை அடுத்து தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

Kathir

Next Post

வந்தது அதிரடி உத்தரவு...! பேருந்துகளில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை..! மீறினால் கடும் நடவடிக்கை...!

Sat Oct 28 , 2023
சேலம் மாவட்டத்தில், பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் பயணிக்கும் இரயில், பேருந்துகளில் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பட்டாசு பட்டாசுக்கடைகள் தயாரிக்கும் இடங்கள், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசுக்கிடங்குகள் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் […]

You May Like