fbpx

தனுஷுக்கு சிக்கல்..!! தயாரிப்பாளர் சங்கம் வைத்த செக்..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

தனுஷை வைத்து படம் எடுக்க நிபந்தனை விதித்து தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக் கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய கூட்டமானது இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்க முடிவெடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலேசித்து அதன் பின்னர் படத்தை கமிட் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனென்றால், தனுஷ் நிறைய தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிவிட்டு படத்தை முடித்து கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. தனுஷ் வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு முன் அவரது 50-ஆவது படமான ராயன் படத்தை தொடங்கி விட்டார். ராயன் படத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாங்கிய படங்கள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More : இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

English Summary

The producer association has ordered a condition to make a film with Dhanush.

Chella

Next Post

2025 IPL-ல் எம்எஸ் தோனி விளையாட வாய்ப்பு..!!

Mon Jul 29 , 2024
MS Dhoni likely to play IPL 2025

You May Like