கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். அப்போது முதல் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், இருவரும் 2022ஆம் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட 3 வினாடி வீடியோவை பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.
அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு டிசம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது., நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினத்திற்கு அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார்.
Read more : COVID-19-ஐ போல HMPV தொற்று ஆக்ஸிஜன் அளவைக் குறைக்குமா..? யாருக்கு அதிக ஆபத்து..? நிபுனர்கள் விளக்கம்..