fbpx

முகச்சிதைவுக்கு சிகிச்சை பெற்ற சிறுமி வீடு திரும்பினார்….படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என அமைச்சர் உறுதி…

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதையடுத்து அவரது படிப்புக்குண்டான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த டான்யாவுக்கு அரியவகை முக சிதைவு நோய் இருந்தது. இதனால் அவதிப்பட்ட டான்யா , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல சவீதா மருத்துவமனையும் உதவ முன் வந்தது. இதற்கான பணியை அரசே முன்னெடுத்தது. சவீதா மருத்துவமனையில் 21 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்படட டான்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து நன்றாக கண்காணித்து சிகிச்சை அளித்த பின்னர் இன்று வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தினமும் அமைச்சர் மற்றும் கட்சியினர் அவரது நிலையை கண்காணித்து வந்தனர்.

சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பும்போது அரசு சார்பாக அமைச்சர் நாசர் வந்திருந்தார். அவர்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் ஆகியோரும் வந்திருந்தனர். சிறுமி நலம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் மருத்துவ காப்பீடு அட்டை , குடும்ப நல அட்டை  போன்றவற்றையும் வழங்கினர். மேலும் டான்யாவின் குடும்பத்தினருக்கு அரசின் வீடு திட்டமும் வழங்கப்பட உள்ளது. அடுத்தபடியான சிறுமி படிப்பதற்குண்டான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டான்யா கூறுகையில் , ’’ இன்று எனக்கு அறுவை சிகிச்சை நடந்ததற்கு முதல்வர் ஐயா தான் காரணம் , அவருக்கும் அமைச்சர் நாசர் ஐயா அவர்களுக்கும் நன்றி எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி .. நான் நன்றாக படித்து முதல்வர் ஐயாவின் பெயரை காப்பாற்றுவேன்’’… என்றார். டான்யாவை சக பள்ளி மாணவர்கள்  உற்சாகத்துடன் வரவேற்றார்கள். இனி என் நண்பர்கள் என்னுடன் சகஜமாக பழகுவார்கள் என டான்யா கூறினார்

Next Post

பெங்களூருவில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ….முன்னறிவிப்பின்றி அதிரடியாக கட்டிடங்களை இடத்தது மாநகராட்சி ….

Mon Sep 12 , 2022
பெங்களூருவில் ஏரிகள் , மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதால்தான் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க .. நோட்டீஸ் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளியது. பெங்களூரு மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஆடிப்போனது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதையடுத்து எந்த அறிவிப்பும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றம் […]

You May Like