fbpx

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது…..!

தர்மபுரி அருகே 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் அவர் தனிமையில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் அந்த கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி கோவில் திருவிழாவில் மழை வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து அர்ஜுனன் தவசு என்ற தெருக்கூத்தை நடத்தி உள்ளனர். அப்போது கிராம மக்கள் எல்லோரும் தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இத்தகைய நிலையில், கொல்லாபுரி( 63), மணிகண்டன் 60 என்று இரண்டு தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் மஞ்சுநாதன் (34) உள்ளிட்ட மூவரும் இணைந்து வீட்டில் தனிமையில் இருந்த 14 வயதில் சிறுமியை வலுக்கட்டாயமாக வயல்வெளிக்கு தூக்கி சென்று அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு 5 நாட்களுக்குப் பிறகு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அந்த சிறுமி அவரது உறவினர்களிடம் தன்னுடைய உடல்நிலை தொடர்பாக தெரிவித்திருக்கிறார். அதோடு சிறுமியிடும் விசாரணை நடத்தியதில் 2️ தெருக்கூத்து கவிஞர்கள் மற்றும் இன்னொரு இளைஞர் உள்ளிட்டோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மஞ்சுநாதன் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களான மணிகண்டன், கொல்லாபுரி உள்ளிட்ட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Next Post

ஐயா என் செருப்பை காணோம்…..! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சீரியல் நடிகை….!

Sun Jun 11 , 2023
சென்னை கேகே நகர் பி டி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா நடிகர் விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் அதேபோல சின்னத்திரையில் ஆனந்த ராகம் என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில், வீட்டு வாசலில் இருந்த இவருடைய காலனி உள்ளிட்ட பொருட்கள் சில […]

You May Like