fbpx

அசத்தல்.‌..! வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..‌.! ஆன்லைன் முன் பதிவு அவசியம்…! முழு விவரம் இதோ…!

வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்‌ இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ வரும் 24-ம் தேதி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய்‌ வித்யாலயா பெண்கள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு,மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளில்‌ இருந்து 300-க்கும்‌ மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ 40,000க்கும்‌ மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்‌. மேலும்‌, இம்முகாமில்‌ 20,000-க்கும்‌ மேற்பட்ட வேலைநாடுநர்களும்‌ கலந்து கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8 மணி முதல்‌ மாலை 4 மணிவரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை அளிக்கும் நிறுவனங்களும்‌, வேலைநாடுநர்களும்‌ www.tnprivatejobs.tn.gob.in என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறை பனி...! வானிலை மையம் தகவல்...!

Mon Jan 16 , 2023
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் […]

You May Like