சர்க்கரை நோய் தொடர்புடைய முக்கிய சிக்கல்களில் சிறுநீரக நோயும் ஒன்றாகும். ஏனெனில் காலப்போக்கில் உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகள் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுவதற்கான திறனை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் அபாயத்தைப் பற்றி அறிந்திருந்தாலும், பல ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காமல் விடுவதால் இது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயாளிகளிடம் இருக்கும் சில அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பை குறிக்கும். இந்த அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
நுரையுடன் கூடிய சிறுநீர்:
சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று சிறுநீரில் புரதம் இருப்பது ஆகும். அதாவது அதிக நுரையுடன் சிறுநீர் கழிப்பது. சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அமைப்பு சேதமடையும் போது இது நிகழ்கிறது, அல்புமின் போன்ற புரதங்கள் சிறுநீரில் கசிய அனுமதிக்கிறது. பெரும்பாலான மக்கள் நுரையுடன் சிறுநீரை சாதாரணமாக நிராகரிக்கிறார்கள், ஆனால் உங்கள் சிறுநீரகங்கள் அழுத்தத்தில் உள்ளதை குறிக்கும் தெளிவான அறிகுறியாகும்.
அடிக்கடி இரவில் சிறுநீர் கழித்தல் :
நீரிழிவு நோய் இருப்பவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இருப்பினும், சிறுநீரகங்கள் சேதமடைந்தால், அவை கழிவுகளை வடிகட்டுவதில் சிக்கல் ஏற்படும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது, குறிப்பாக இரவில் இந்த பிரச்சனை அதிகரிக்கும்.. பலர் இதை சிறுநீரக நோயுடன் தொடர்புபடுத்தாமல் இருக்கலாமம்.
கால்கள், கணுக்கால் மற்றும் கைகளின் வீக்கம்:
சிறுநீரக சிக்கல், அடிக்கடி உடலில் கழிவுகள் மற்றும் திரவம் குவிவதற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பாதங்கள், கணுக்கால் மற்றும் கைகளில் கூட வீக்கம் ஏற்படலாம். அதாவது திரவங்கள் மற்றும் சோடியம் அளவை சமநிலைப்படுத்துவதில் சிறுநீரகங்கள் சிரமப்படுகின்றன என்பதற்கான அறிகுறியாகும்.
கால் பிடிப்புகள்:
கால் பிடிப்புகள், கவனிக்கப்படாத மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அவை ஏற்படுகின்றன. சிறுநீரக செயல்பாடு மோசமடைந்தால், இந்த ஏற்றத்தாழ்வுகள் தசைச் சுருக்கங்கள் மற்றும் வலிமிகுந்த பிடிப்புகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் இந்த பிடிப்புகளை புறக்கணிக்கிறார்கள்
விவரிக்க முடியாத சோர்வு மற்றும் ரத்த சோகை:
சிறுநீரக செயல்பாடு குறைவதால், கழிவுப் பொருட்கள் ரத்தத்தில் குவிந்து, சோர்வு உணர்வுக்கு வழிவகுக்கிறது. மேலும், சிறுநீரகங்கள் எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன, இது இரத்த சிவப்பணு உற்பத்திக்கு அவசியம்.
சிறுநீரகங்கள் சேதமடையும் போது, இந்த ஹார்மோனின் குறைந்த அளவு ரத்த சோகையை ஏற்படுத்தும், இது வெளிர், பலவீனம் மற்றும் நிலையான சோர்வுக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த சோர்வை அவர்களின் நீரிழிவு நோய் அல்லது வாழ்க்கை முறையின் அறிகுறியாக தவறாக நினைக்கலாம்.
ஆரம்பகால கண்டறிதல்
நீரிழிவு நோயாளிகள் வழக்கமான ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிவது, இறுதி நிலை சிறுநீரக நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்க உதவும், இதற்கு பெரும்பாலும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
எப்படி தடுப்பது?
- ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்
- ரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்
- சிறுநீரகத்திற்கு உகந்த உணவைப் பின்பற்றுதல்
- வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்தல்
- வழக்கமான உடற்பயிற்சி மற்றும் எடை மேலாண்மை
- உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்