அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் நீங்கள் பாஜகவுடன் இணைந்தது பற்றி உங்களது தந்தை எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று ராதிகா சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா அவர்கள் கூறியதாவது “நான் எனது தந்தையிடம் அரசியல் குறித்து பேசியது இல்லை. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடன் நான் மலேசியா போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். அவர் அங்குள்ள மக்களிடம் ஊருக்கு திரும்ப வரவேண்டாம்” என்று கூறுவார்.
உங்கள் வாழ்க்கை தரம் இங்கு நன்றாக இருக்கிறது, இங்கேயே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இந்திய அரசு மக்களின் தரத்தை உயர்த்தியுள்ளது.அதனால் எனது தந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டி இருப்பர் “என்று கூறினார்.