வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இதனிடையே நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி சமீபத்தில் அறிவித்தார்.. சுஷ்மிதா சென் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து கொண்ட அவர், தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், இருவரும் டேட்டிங் செய்கிறோம் என்றும் லலித் மோடி தெளிவுபடுத்தினார். இருப்பினும், திருமணம் “ஒரு நாள் நடக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்…
லலித் மோடி சுஷ்மிதாவுடனான தனது உறவை அறிவித்த உடனே தனது இன்ஸ்டாகிராம் பயோவையும் மாற்றியிருந்தார், அதில், ” இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் – இறுதியாக எனது துணையுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன். ” என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், சுஷ்மிதா அவர்களின் உறவு குறித்த எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த ஜோடி தங்கள் உறவை முறித்துக்கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது. சமீபத்தில், லலித் மோடி தனது டிபி-ஐயும், இன்ஸ்டாகிராம் பயோவையும் மாற்றி உள்ளார்.. சுஷ்மிதாவை பற்றி எதையும் குறிப்பிடாமல், இந்தியன் பிரீமியர் லீக்-ன் நிறுவனர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.. தனது இன்ஸ்டாகிராம் டிபியில் சுஷ்மிதா உடன் இருந்த புகைப்படத்தை மாற்றி தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார்..
1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1996 ஆம் ஆண்டு தஸ்தக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் ரட்சகன் படத்திலும், முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலிலும் அவர் நடித்திருப்பார்.. மேலும் பாலிவுட்டில். பிவி நம்பர் 1, மைனே பியார் கியூன் கியா, மைன் ஹூன் நா மற்றும் நோ ப்ராப்ளம் படங்களில் நடித்திருந்தார்.. சுஷ்மிதா கடைசியாக ஆர்யா 2 என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..