உரிமைத் தொகைக்கு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலை தயார் செய்யும் இறுதி கட்டப் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யார் எல்லாம் பெற முடியும் ..?
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை பெற முடியும்.
மெசேஜ் வரவில்லையா…?
இந்த உரிமை தொகை திட்டத்தில் யார் யாரெல்லாம் பயனாளிகளாக இருக்கப் போகிறார்கள் என்பது தொடர்பாக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். இந்த நிலையில், நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தாலும், விண்ணப்பதாரர்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது..