fbpx

2 ஆண்டுகளுக்கு முன் மரணம்..!! இறுதிச் சடங்கு செய்த குடும்பம்..!! மீண்டும் திரும்பி வந்ததால் விநோத சடங்கு..!!

உத்தரகாண்ட் மாநிலம் கதிமா நகரம், ஶ்ரீபூர் பிச்வா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் சந்திர பட் (42). இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நவீன் சந்திர பட், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதால் அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போது, சம்பாவத் பகுதியின் பன்பசா நதிக்கரையோரம் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அது காணாமல்போன நவீன் சந்திர பட் போல் இருந்ததால், அவர்தான் இறந்துவிட்டார் என நினைத்து, அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நவீன் சந்திர பட், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் உயிருடன் வந்ததால், வேறு ஒரு நபரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த விவரம் தெரியவந்தது. நவீன் சந்திர பட்டின் குல வழக்கப்படி, இறந்தவர்கள் யாரேனும் திரும்பி வருவார்களேயானால் அவர்களுக்கு பிறப்பு முதல் திருமணம் வரை அனைத்து புனித சடங்குகளையும் செய்ய வேண்டுமாம்.

அதாவது மறுபிறப்பு போல் இதனை கருதுகின்றனர். அதன்படி, நவீன் சந்திரபட்டுக்கு இந்த முறை நாராயண் பட் என பெயர் வைக்கப்பட்டு, அவர் ஏற்கனவே திருமணம் செய்த, மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சடங்கிற்காக மட்டுமே நாராயண் பட் என பெயரிடப்பட்ட தாகவும், அவரை நவீன் சந்திர பட் என்றே அழைக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

Chella

Next Post

விடியாத அரசு.! 4000 கோடி என்னாச்சு.? இந்த மழைக்கு சென்னை தாங்காதா.? எதிர்க்கட்சிகளின் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sat Dec 2 , 2023
கடந்த சில தினங்களாக தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை இது வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் 4000 கோடி என்னாச்சு என என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் […]

You May Like