fbpx

இப்படியும் ஒரு சாவா? நடனமாடிய போதே நடந்த விபரீதம்.!

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள வாரணாசியில் கடந்த 25-ம் தேதி நடந்த திருமண விழாவில் தனது மைத்துனர் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென தரையில் விழுந்துள்ளார்.

அருகில் இருந்துவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அவரால் எழுந்திருக்க முடியவில்லை. நிலைமையை புரிந்து கொள்வதற்குள் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் விஸ்வகர்மா (40) என அடையாளம் காணப்பட்டார். இவர் சென்ற 25-ம் தேதி திருமண விழாவில் கலந்து கொள்ள தாகியாவுக்குச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தினை போல், முன்பு ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள தனது மைத்துனர் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் தாஹோத் மாவட்டத்தில் உறவினர் ஒருவரின்  நிகழ்ச்சியில் 51 வயது நபர் இறந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

கீர்த்தி அனுப்பிய ’ப்ரெண்ட் ரெக்வஸ்ட்’..!! ஆர்வத்தில் ’Accept’ பண்ண இளைஞர்..!! ரூ.40 லட்சம் அபேஸ்..!!

Fri Dec 2 , 2022
பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் நடிகைகளின் படங்களை ப்ரோபைல் படங்களாக வைத்து போலி அக்கவுண்டுகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த போலி அக்கவுண்டுகளை உண்மை என்று நம்பி ஏமாறும் நபர்கள் இந்த காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை உறுதிபடுத்துவதுபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தை ப்ரோபைலாக […]

You May Like