fbpx

பழுதான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்.. இடிந்து விழுந்தா யார் பொறுப்பு? அதிகாரிகள் பரபரப்பு தகவல்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பெறும் மக்களுக்காக தவணை முறையில் வீடு வாங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்பட்டு வந்தன.

அடுக்குமாடி குடியிருப்புகள் விவகாரம் தொடர்பாக வீட்டு வசதி வாரியம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை மொத்தமாக கைவிட, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

வீட்டு வசதி வாரியம்: அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால், இவைகளை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திடம் வீட்டு உரிமையாளர்களே கோரிக்கை வைத்திருந்தனர்.. இந்த கோரிக்கையை ஏற்று, உரிமையாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.

இதற்காக, சென்னை, கோவையில், 60 குடியிருப்பு வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டுக்கு புதிய கொள்கை வெளியிடப்படும் என்று கடந்த வருடம் பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாகவும், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிந்தால் இனி உரிமையாளரே பொறுப்பு என்றும் சோஷியல் மீடியாவில் 2 நாளைக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.

அதேபோல, 4 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து முக்கிய நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில், 40.60 கோடி ரூபாயில், 108 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், கடந்த 2022ல் அறிவிக்கப்பட்டது.. ஈரோடு போலவே, சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடித்து, புதிய அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்தவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதற்கு, கடந்த வருடம் வாரிய நிர்வாக குழு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக இத்திட்டங்கள் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல முடியால் அப்படியே நின்றுபோய் உள்ளதாம்.

எனவே, இந்த திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, மறு மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, உயர் நிலை குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, நிதித்துறை இணை செயலர், நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி பிரதிநிதி, பொதுப்பணி துறையின் முதன்மை தலைமை பொறியாளர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், வீட்டுவசதி வாரிய தலைமை பொறியாளர் உள்ளிட்ட ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Read more ; சோகம்.. சிட்டிசன் பட வில்லன் நடிகர் காலமானர்..!! பிரபலங்கள் அஞ்சலி

English Summary

Dilapidated Housing Board flats.. Who is responsible if they collapse?

Next Post

தமிழ்நாட்டின் ஓசூரை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்..!! இல்லையென்றால்..!! மிரட்டல் விடுக்கும் வாட்டாள் நாகராஜ்..!!

Wed Sep 4 , 2024
If we don't connect Hosur with Karnataka, we will not allow the metro rail project to be extended from Bengaluru

You May Like