திண்டுக்கல் பகுதியில் உள்ள அமிர்தலிங்கம் தன்னுடைய சித்ரா என்ற மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் இருக்கும் செல்லம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனைவி டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக மோஜ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார்.

அதில் கிடைத்த திரைத் துறை நண்பர்களின் உதவியால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனியாக குடிபெயர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற தன்னுடைய மூத்த மகளின் திருமணத்தில் வந்துள்ளார்.
மகளின் திருமணம் முடிந்ததும் , மீண்டும் சென்னைக்கே திரும்ப செல்ல உள்ளதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம், மனைவியை அவர் கழுத்தில் அணிந்திருந்த அதே துப்பட்டாவால் கழுத்தை நெறித்து பரிதாபமாக கொலை செய்துள்ளார்.
நேற்று காலை வெகுநேரம் ஆகியும் சித்ராவை காணாமல் உறவினர்கள் தேடிய போது வீட்டில் காயத்துடன் சித்ரா இறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்கு புகார் கொடுத்தனர்.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தலைமறைவாக இருந்த கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.