fbpx

நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடி…! கடந்த ஆண்டை விட 17.30 சதவீதம் அதிகமாகும்…!

2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும்.

நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. 2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும். திரும்பப் பெறப்பட்ட தொகைக்குப் பின் நிகர நேரடி வரி வருவாய் ரூ. 15.60 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 20.25 சதவீதம் அதிகமாகும். இது 2023-24 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 80.23 சதவீதம் ஆகும்.

கார்ப்பரேட் வருமான வரி எனப்படும் சிஐடி மற்றும் தனிநபர் வருமான வரி எனப்படும் பிஐடி ஆகியவற்றின் மொத்த வருவாய் வசூலும் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. சிஐடி வளர்ச்சி விகிதம் 9.16 சதவீதம் ஆகவும், பிஐடி மட்டும் 25.67 சதவீதமும், எஸ்டிடி உட்பட பிஐடி 25.93 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பணத்தைத் திரும்பப்பெறுதல் சரிசெய்யப்பட்ட பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.57 சதவீதம் ஆகும்.

பிஐடி வசூலில் 26.91 சதவீதமும் எஸ்டிடி உட்பட பிஐடி 27.17 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 10 வரை ரூ. 2.77 லட்சம் கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகமே...! இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல்...! அரசு அசத்தல் அறிவிப்பு...!

Tue Feb 13 , 2024
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் இன்று முதல் 15.02.2024 தேதி வரை காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள். […]

You May Like