fbpx

பெரும் சோகம்…! பிரபல இயக்குனர் அற்புதன் காலமானார்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்…!

தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் பிரபல இயக்குனராக திகழ்ந்த அற்புதன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது மரணச் செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2002-ல் ‘அற்புதம்’ படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸை முன்னணி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அற்புதன். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம், ராகவா லாரன்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. குணால், அனு பிரபாகர், லிவிங்ஸ்டன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

52 வயதான, இயக்குனர் அற்புதன் விபத்தில் சிக்கி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். தெலுங்கில் ஷாம் நடித்த ‘மனதோடு மழைக்காலம்’ மற்றும் உதய் கிரண் நடித்த ‘லவ் டுடே’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

Vignesh

Next Post

நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு..!! திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு..!! பார்வையாளர்கள் அதிர்ச்சி..!!

Thu Nov 9 , 2023
திரையரங்குகளில் கட்டணம் உயர்த்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணம் உயர்கிறது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் 2020 ஆம்ஆண்டு அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் போது மக்கள் நலன் கருதி டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.120 டிக்கெட் […]

You May Like