தற்போது உள்ள அவசரமான கால சுழலில், பொறுமையாக சாப்பிடுவதற்கு கூட நேரம் இருப்பது இல்லை. இதனால், நின்று கொண்டே அவசர அவசரமாக வாயில் உணவை அள்ளி போட்டு விட்டு ஓடுகிறோம். உணவிற்கே நேரம் இல்லாத போது தண்ணீருக்கு எங்கு நேரம் இருக்க போகிறது?. நின்று கொண்டே கடமைக்கு தண்ணீர் குடிப்பவர்கள் தான் அநேகர். ஆனால், அப்படி நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் பல பாதிப்புகள் ஏற்படும்.
ஆம், உண்மை தான். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, உடலில் உள்ள அமிலங்களின் சமநிலை சீர்குலையும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகம் ஏற்படும். இதற்க்கு நீங்கள் எந்த பொடியை தண்ணீரில் கரைத்து குடித்தாலும் எந்த பயனும் இருக்காது. இதற்க்கு ஒரே தீர்வு, உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது தான். இது மட்டும் இல்லாமல், நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால், நரம்புகளுக்கு திடீர் அதிர்ச்சி உண்டாகும். இது காலப்போக்கில் மூட்டு வலியை உண்டாக்கி, கீல்வாதத்தை ஏற்படுத்திவிடும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், சிறுநீரக பிரச்சனை ஏற்படும், அஜீரண கோளாறை ஏற்படுத்தும். மேலும், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும். நின்ற நிலையில் தண்ணீர் குடிப்பதால், மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயத்தை அதிகம் உள்ளது. இதனால் முடிந்த வரை, குறைந்தது 5 நொடிகள் உங்கள் ஆரோக்கியத்திற்காக செலவு செய்து, உட்கார்ந்து தண்ணீர் குடியுங்கள்..
Read more: பிரியாணியில், புதினா இலைகளை ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும் தெரியுமா?