fbpx

#சென்னை : விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம்.. ஒன்றறை மாத குழந்தை பரிதாப பலி.!

சென்னை மாநகர பகுதியில் வெங்கடபுரத்தில் யுவராஜ் – கௌசல்யா தம்பதிகள் இவர்களின் பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று யுவராஜ்  வழக்கம் போல் வேலைக்கு சென்ற பின்னர் , மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒன்றறை வயது குழந்தை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளது. 

இத‌னிடையே அந்த சிறுபிள்ளை  விளையாடிய பொம்மையானது மீன் வளர்ப்பு தொட்டியில் விழுந்த நிலையில், அதனை எடுக்க குழந்தை முயலும் போது மீன் வளர்ப்பு தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. சிறிது நேரம் சென்ற பின்பு குழந்தை என்ன செய்கிறார் என்று பார்க்கும் போது, மீன் வளர்ப்பு தொட்டியில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கே குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை கொடுத்த தகவலை அடுத்து அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

’வேலைக்கு ஆட்கள் தேவை’..!! ஊதியத்துடன் பயிற்சி..!! கை நிறைய சம்பளம்..!! நித்தியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Tue Nov 15 , 2022
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய இவர், நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால், அந்த நாடு எங்கு உள்ளது, எப்படி இருக்கும் […]
தீபாவளி விருந்தில் நித்யானந்தா..? அழைப்பு விடுத்த எம்பி-க்கள்..!! சர்ச்சையை கிளப்பிய நாளிதழ்..!!

You May Like