fbpx

ராகுல் காந்திக்கு மற்றொரு சிக்கல்…! 4 வாரத்தில் பதிலளிக்க NCPCR நோட்டீஸ்…!

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட ராகுல் காந்திக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்குமாறு என்சிபிசிஆருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டெல்லியில் 9 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்பி ராகுல் காந்தி உயிரிழந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகைப்படத்தை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். நீதி சட்டம், POSCO ஆகியவை பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் சிறார்கள் அடையாளத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இதனை மீறியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

Vignesh

Next Post

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வரும் 31-ம் தேதிக்குள் இதை செய்யவில்லை எனில் சிக்கல்...

Mon Mar 27 , 2023
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களும் வரும் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான […]

You May Like