இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த விவாதம் நடத்த பெற்றது.
சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் குளிர் நெகிழ்வு எதிர்ப்பிற்கான கூடுதல் தேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI), காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI), இத்தகைய பூட்ஸ்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மூலப்பொருள் தேவைகள் முதல் சோதனை வரை தரநிலையின் விவரக்குறிப்புகள் விவாதிக்கப்பட்டன.