பொதுவாக பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் ஒரு சில நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளோம். ஒரு சிலர் காபி மற்றும் டீயுடன் பிஸ்கட்டுகளை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காலை உணவு சாப்பிடும் நேரம் வரை பசி தாங்குவதற்கு இந்த பிஸ்கட் தான் உதவுகிறது என்று நினைத்து உண்ணுகிறோம்.
ஆனால் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவது உடலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். டீ மற்றும் காபியுடன் பிஸ்கட் சாப்பிடுவதால் அதிகப்படியான சர்க்கரை உடலில் கலக்கிறது. இது முகத்தில் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் பிஸ்கட்டில் அதிக அளவு மைதா மாவு இருப்பதால் செரிமான பிரச்சனையும் ஏற்படுகிறது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும். நார்ச்சத்து இல்லாத பிஸ்கட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். பிஸ்கட்டில் ட்ரான்ஸ்பேட் மற்றும் சாச்சுரேட்டட் போன்ற அமிலங்கள் அதிகளவில் உள்ளதால் இதய நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமுள்ள பிஸ்கட்களை உண்பதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். பிஸ்கட்டில் எந்தவிதமான ஊட்ட சத்துகளும் இல்லை. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பது ஊட்டச்சத்து குறைபாடை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். சாதாரணமாக காலையில் ஸ்நாக்ஸாக சாப்பிடும் பிஸ்கட்டில் நன்மைகள் எதுவும் இல்லை என்பதால் மருத்துவர்களும் இதனை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.