fbpx

இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 47 மாணவர்கள் தகுதி நீக்கம்…! தேசிய தேர்வு முகமை அதிரடி..!

இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிகாரில் 17 மாணவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததை அந்த மாநில போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) பிஹார் போலீஸார்தகவல் தெரிவித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், வினாத்தாள் தலா ரூ.40 லட்சத்துக்கு விற்பனைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் உட்பட 19 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிகாரில் 17 மாணவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல குஜராத் கோத்ரா மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. இளநிலை நீட் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே 63 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது மேலும் 47 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

English Summary

Disqualification of students involved in malpractices in junior NEET examination

Vignesh

Next Post

கொத்து கொத்தாக மரணம்...! கள்ளச்சாராய வழக்கை CBI விசாரிக்க வேண்டும்...! நிர்மலா சீதாராமன் அதிரடி

Mon Jun 24 , 2024
CBI should investigate the illicit liquor case.. Nirmala Sitharaman

You May Like